
மூளைக் குழம்பு
அசைவம்வெங்காயத்துடன் வதக்கிய மூளையை மிளகாய்-சீரகம்-தேங்காய் மசாலாவில் எண்ணெய் பிரியும் வரை வேகவைக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்குழம்பு
பொருட்கள்
- 2 மூளை
- 6 வற்றல்
- 4 சில் தேங்காய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 10 வெங்காயம்
- 3 கரண்டி நல்லெண்ணெய்
- தேவையான அளவு மஞ்சள்தூள், உப்பு
செய்முறை
- மூளையை நன்கு சுத்தம் செய்து 8 துண்டுகளாக்கிக் கொள்ளவும். வற்றல் சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி மூளையையும் சேர்த்து வதக்கி தேங்காய்ப்பாலுடன் அரைத்த மசாலை கலக்கி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறு தீயில் வேக வைத்து குழம்பு கெட்டியாக எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.