மூளை வறுவலின் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

மூளை வறுவல்

அசைவம்

வதக்கிய சிறிய வெங்காயம், சீரகம், மிளகுடன் மூளைத் துண்டுகளை மென்மையான மசாலா வறுவலாக வேகவைக்கப்படும்.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 2 மூளை
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • ½ தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி மிளகு தூள்
  • 2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. 2 மூளைகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 50 கிராம் சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக்கிக்கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 8 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் ½ தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் இவற்றைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி, இத்துடன் 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 2 தேக்கரண்டி மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கொதித்தபின், மூளைத்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, மூளை நன்கு வதங்கிய பின் இறக்கவும்.