பூந்தியின் புகைப்படம், வெண்கலத் தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பூந்தி

சைவம்

சர்க்கரைப் பாகில் ஊற வைக்கப்படும் சிறிய பொரித்த கடலைமாவு முத்துக்கள், பாரம்பரிய பண்டிகை இனிப்பு.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • ¼ கிலோ கடலை மாவு
  • சிறிதளவு நெய்
  • சிறிதளவு கேசரி பவுடர்
  • ½ கிலோ சீனி
  • தேவையான அளவு டால்டா அல்லது ரீபைண்ட் ஆயில்

செய்முறை

  1. சீனியை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். கடலை மாவை தண்ணீர் சேர்த்து (கேசரி பவுடர் சிறிது சேர்த்துக் கொள்ளவும்) தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும். வாணலியில் டால்டா அல்லது நெய்யை காய வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவு அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பாயில் போடவும் சுவையான பூந்தி ரெடி.