எலும்புச்சாம்பாரின் புகைப்படம், மண் பாத்திரத்தில் பரிமாறப்பட்டுள்ளது

எலும்புச்சாம்பார்

அசைவம்

எலும்புடன் கூடிய இறைச்சி, துவரம் பருப்பு, சாம்பார் பொடியுடன் கொதிக்க வைக்கப்படும் நாட்டுப்புற சாம்பார், இட்லி-தோசைக்கு ஏற்றது.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
35 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாம்பார்

பொருட்கள்

  • 200 கிராம் நெஞ்சு எலும்பு
  • சிறிதளவு வெங்காயம்
  • 6 பூண்டு
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 6 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் சாம்பார் பொடி
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  1. எலும்பை வேகவைத்துக் கொள்ளவும். பருப்பை வேக வைத்துக் கடைந்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு நறுக்கியது, சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். விரும்பினால் 2 கரண்டி எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தும் கொதிக்க வைக்கலாம். இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.