
படகு முட்டை
அசைவம்அவித்த முட்டையை படகு வடிவில் வெட்டி, வெண்ணெய், மிளகுத்தூள் சேர்த்த மஞ்சள் கருவை நிரப்பி, ரொட்டித்துண்டு பாய் மரம் போல் செருகிப் பரிமாறப்படும் அலங்கார சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 10 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 25 நிமிடங்கள்
- பேருக்கு
- 3
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சிற்றுண்டி
பொருட்கள்
- 3 முட்டை (முழுவதுமாக வேகவைத்தது)
- 1 மேஜைக்கரண்டி அமுல் பட்டர் அல்லது வெண்ணெய்
- தேவைக்கு ஏற்ப மிளகுத்தூள், உப்புத்தூள்
- ரொட்டித்துண்டு (படகு அடிப்பகுதி மற்றும் பாய் வடிவங்களுக்கு வெட்ட)
செய்முறை
- அவித்த முட்டையின் பாதி வெள்ளைக்கருவை படகு வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். ஒரு ரொட்டித்துண்டை ஒரு அங்குலச் சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
- அதன் மீது வெண்ணெய் தடவி, மிளகுத் தூள் உப்புடன் மசித்த மஞ்சள் கருவை நிரப்பவும்.
- அதன்மீது ரொட்டித்துண்டை நீண்ட முக்கோண வடிவத்தில் வெட்டி, பாய் மரம் போல் தெரிவதற்கு ஓரத்தில் ஒரு பிஸ்கட் அல்லது ரொட்டித்துண்டு செருகி வைக்கவும். படகு முட்டை ரெடி.