
இரத்தம் வதக்கல்
அசைவம்உறைந்த ஆட்டு இரத்தத்தை துண்டுகளாக உடைத்து வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காயுடன் வதக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 200 கிராம் ஆட்டின் இரத்தம்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 6 பச்சை மிளகர்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- ½ முடி தேங்காய்
- 50 கிராம் வெங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
- தேவையானது உப்பு
செய்முறை
- ஆட்டின் இரத்தம் உறைந்து இருக்கும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக கலைந்து விட வேண்டும். (பிசைந்தும் சிறு சிறு உருண்டைத் துண்டுகளாக இருக்கும்) பின் தண்ணீரை வடித்து விட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியதும் இரத்தத்தையும் சேர்த்து உப்பு, மஞ்சள் கலந்து கிளற வேண்டும். சீக்கிரம் வந்து விடும். இறக்கும் போது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும். இரத்தம் நிறம் மாறி இருக்கும். உளுந்தம் சுண்டல் மாதிரி இருக்கும். இட்லியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.