
பேல் பூரி
சைவம்நொறுக்கிய பூரிகள், பொரி, உருளைக்கிழங்கு சிப்ஸ், நறுக்கிய காய்கறிகளுடன் இனிப்பு, புதினா, பூண்டு சட்னிகள் கலந்து தயாரிக்கப்படும் மொறுமொறுப்பான சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 5 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 25 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்சாட் வகைகள்
பொருட்கள்
- 1 கப் நொறுக்கிய பானி பூரிகள்
- 1/2 கப் உருளைக்கிழங்கு சிப்ஸ்
- 2 கப் பொரி
- 2 டேபிள் ஸ்பூன் கேரட் துருவல்
- 1 1/2 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்த வெங்காயம்
- 1 1/2 டேபிள் ஸ்பூன் துருவிய மாங்காய், வெள்ளரிப் பிஞ்சு
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை
- 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய தக்காளி
- 1/2 கப் மெல்லிய ஓமப்பொடி
- 1/2 டீஸ்பூன் பொடி உப்பு
- 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
- 1 1/2 கப் வேகவைத்த பட்டாணி, வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு
- 3 டீஸ்பூன் இனிப்பு சட்னி
- 3 டீஸ்பூன் புதினா சட்னி
- 3 டீஸ்பூன் பூண்டு சட்னி
- 1/4 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் பொடி
- 15 பல்லு பூண்டு (பூண்டு சட்னிக்கு)
- சிறிதளவு புளி (ஊற வைத்தது, பூண்டு சட்னிக்கு)
- 1/2 டீஸ்பூன் சீரகம் (பூண்டு சட்னிக்கு)
- 1 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி (பூண்டு சட்னிக்கு)
- 1 டீஸ்பூன் உப்பு (பூண்டு சட்னிக்கு)
செய்முறை
- பூண்டு சட்னி: பூண்டு, ஊற வைத்த புளி, சீரகம், மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பேசினில் நொறுக்கிய பூரிகள், சிப்ஸ், பொரி, பாதி ஓமப்பொடி சேர்த்து கலக்கவும்.
- குறிப்பிடப்பட்ட அரிந்த காய்கறிகளை சேர்த்து பொடி வகைகளைத் தூவவும்.
- கடைசியில் சட்னி வகைகளை, விருப்பத்திற்கேற்ப சேர்த்து வேகமாக கலந்து உடனே பரிமாறவும். பரிமாறும் போது மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, ஓமப்பொடி தூவி பரிமாறவும். (குறிப்பு: மெல்லிய பாம்பே ஓமப்பொடியை உபயோகப்படுத்தினால் தான் ருசி நன்றாக இருக்கும்.)