பீட்ரூட் சூப்

வகைகள்சூப்

பொருட்கள்

  • 1/4 கிலோ பீட்ரூட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 உருளைக்கிழங்கு
  • பாதி எலுமிச்சம் பழம்
  • சிறிதளவு புதினா
  • 1/2 கப் கிரீம்
  • தேவையானது மிளகு தூள்
  • தேவையானது உப்பு
  • தாளிக்க எண்ணெய்

செய்முறை

  1. பீட்ரூட், உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேக வைக்கவும். பெ. வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெயில் தாளித்து வேக வைத்து கொள்ளவும். இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் மிளகுதூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்க்கவும். சூப் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கிரீம், புதினா சேர்த்து பருகவும்.