ஆம வடை

வகைகள்வடை

பொருட்கள்

  • 250 மி.லி. கடலைப்பருப்பு (குறைந்தது)
  • சிறிது பெருங்காயம்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • சிறிது சீரகம், பட்டை
  • வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • 6 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை, மல்லிச் செடி

செய்முறை

  1. 250 மி.லி. கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரம் நனைய வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில், தட்டி தண்ணீரை வடிய வைக்கவேண்டும். உரலை நன்றாக துடைத்து விட்டு பருப்புடன் உப்பு 1 டீஸ்பூன், பெருஞ்சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் 6, கருவேப்பிலை மல்லிச் செடி போட்டு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு நன்றாகச் சிவந்தவுடன் எடுக்கவும். கடலைப்பருப்புக்குப் பதில் பட்டாணிப் பருப்பை உபயோகித்தும் இதேமாதிரி சுடலாம்.