ஆலு பப்பட் சாட்-இன் புகைப்படம், தயிர், இனிப்பு சட்னி அடுக்குடன்

ஆலு பப்பட் சாட்

சைவம்

நொறுக்கிய பொரித்த அப்பளத்தின் மேல் உருளைக்கிழங்கு, கடைந்த தயிர், இனிப்பு சட்னி, சாட் மசாலா தூவி அடுக்கி தயாரிக்கப்படும் ஆலு பப்பட் சாட்.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாட் வகைகள்

பொருட்கள்

  • 1/2 கப் மைதா
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • இனிப்பு சட்னி (பானிபூரியில் கூறியபடி செய்யவும்)
  • 1 கப் கெட்டியான தயிர் (கடையவும்)
  • 2 (அ) 3 வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா பொடி
  • 1/4 டீஸ்பூன் கருப்பு உப்பு பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை

செய்முறை

  1. மைதா, கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவைப்பட்ட தண்ணீர் விட்டு கெட்டியான சப்பாத்திமாவு போல பிசையவும்.
  2. ஒரு ஈரத்துணி கொண்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. நன்றாகப் பிசைந்து சிறிய பூரி போல செய்து எண்ணெயில் குறைந்த தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  4. உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலெடுத்து சிறிய சதுரத் துண்டங்களாக அரியவும்.
  5. ஒரு தட்டில் பொரித்த அப்பளங்களை நொறுக்கி பரப்பவும். அதன் மேல் உருளைக்கிழங்கைப் பரப்பவும்.
  6. அதன் மேல் கடைந்த தயிரை ஊற்றவும். இனிப்பு சட்னியை தெளிக்கவும்.
  7. கடைசியில் உப்பு, மிளகாய்த் தூள், சாட் மசாலாத் தூள், கருப்பு உப்பு தூவி மேலே கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்து உடனே பரிமாறவும்.