ஆலு சாட் - 2-இன் புகைப்படம், மேலே சேவ் தூவப்பட்டுள்ளது

ஆலு சாட் - 2

சைவம்

வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை பொரித்த ரவை டயமண்டுகள், புளிப்பு சாஸ், வெங்காயம், சேவுடன் கலந்து தயாரிக்கப்படும் ஆலு சாட்.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாட் வகைகள்

பொருட்கள்

  • உருளைக்கிழங்கு (வேகவைத்து சதுரத் துண்டங்களாக்கியது)
  • இனிப்பு, புளிப்பு சட்னி (ஆலு சாட்-1 செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி)
  • ரவை (மாவுக்கு)
  • சிறிது உப்பு (மாவுக்கு)
  • மிளகாய்த் தூள் (தேவைக்கேற்ப)
  • சாட் மசாலாத் தூள் (தேவைக்கேற்ப)
  • பொடியாக அரிந்த வெங்காயம்
  • ஓமப் பொடி (சேவ்)
  • நறுக்கிய கொத்தமல்லித் தழை (மேலே தூவ)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)

செய்முறை

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து சதுரத் துண்டங்களாக்கவும். இனிப்பு-புளிப்பு சட்னியை தயாரிக்கவும்.
  2. ரவையோடு சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவு போல பிசையவும். நன்றாக இடித்து மாவை சிறிது தளர்த்தியாக்கவும்.
  3. 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தியாக மாவை இடவும். சிறிய டயமண்ட் வடிவ பிஸ்கட் போல வெட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
  4. இதை உருளைக்கிழங்கோடு கலந்து உப்பு, மிளகாய்த் தூள், சாட் மசாலாத் தூள், பொடியாக அரிந்த வெங்காயம், ஓமப் பொடி மற்றும் இனிப்பு, புளிப்பு சாஸை சேர்த்துக் கொள்ளவும்.
  5. அரிந்த கொத்தமல்லித் தழை மற்றும் ஓமப் பொடி தூவி உடனே பரிமாறவும்.