
ஆலு சாட் - 1
சைவம்கொத்தமல்லி சட்னி நிரப்பிய வேகவைத்த உருளைக்கிழங்கை புளிப்பு-இனிப்பு சாஸ், தயிர் ஊற்றி சாட் மசாலா தூவி பரிமாறப்படும் ஆலு சாட்.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 10 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சாட் வகைகள்
பொருட்கள்
- 1/2 கிலோ வேகவைத்த உருளைக்கிழங்கு (சிறியது, ஒரே அளவானது)
- 1 கப் கெட்டியான தயிர்
- சாட் மசாலா பொடி (தேவைக்கேற்ப)
- 2 பச்சை மிளகாய் (கொத்தமல்லி சட்னிக்கு, அரைக்க)
- 1/2 டீஸ்பூன் உப்பு (கொத்தமல்லி சட்னிக்கு, அரைக்க)
- 1 கட்டு கொத்தமல்லித் தழை (கொத்தமல்லி சட்னிக்கு, அரைக்க)
- 1/2 கப் நீர்த்த புளிக்கரைசல் (இனிப்பு-புளிப்பு சாஸிற்கு)
- 1 டேபிள் ஸ்பூன் தனியா பொடி (இனிப்பு-புளிப்பு சாஸிற்கு)
- 1/4 கப் சர்க்கரை (அ) வெல்லம் (இனிப்பு-புளிப்பு சாஸிற்கு)
- உப்பு, மிளகாய்ப்பொடி (இனிப்பு-புளிப்பு சாஸிற்கு, தேவைக்கேற்ப)
- 1 டீஸ்பூன் வறுத்த சீரகப்பொடி (இனிப்பு-புளிப்பு சாஸிற்கு)
செய்முறை
- ஒரே அளவிலான சிறிய உருளைக்கிழங்கை வாங்கவும்.
- இதை வேக வைத்து, தோலெடுத்து மத்தியில் இரண்டாக வெட்டவும்.
- வெட்டிய பாகத்தில் சிறிதளவு கொத்தமல்லி சட்னியைத் தடவி இரண்டு பாகத்தையும் ஒட்டி விடவும்.
- புளிப்பில்லாத தயிரைக் கடைந்து சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- புளிக் கரைசலை சிறிது நேரம் நன்றாக கொதிக்க வைத்து பச்சை வாசனை போனதும் உப்பு, மிளகாய்த் தூள், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு தனியா, சீரகத் தூள் கலந்து இறக்கவும்.
- உருளைக்கிழங்கை ஒரு தட்டில் அலங்காரமாக வைக்கவும்.
- அதன்மேல் இனிப்பு, புளிப்பு சாஸை ஊற்றி, அதன் மேல் கடைந்த தயிரை ஊற்றவும்.
- சிறிதளவு மேலே சாட் மசாலாத் தூளைத் தூவி உடனே பரிமாறவும்.