
உருளைக்கிழங்கு போண்டா
சைவம்பச்சை வெங்காயம்-மிளகாயுடன் கலந்த மசாலா மசித்த உருளைக்கிழங்கு உருண்டைகளை கடலைமாவில் தோய்த்து பொரிக்கப்படும் போண்டா.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்பொண்டா வகைகள்
பொருட்கள்
- 1/2 கிலோ வேகவைத்த உருளைக்கிழங்கு (பூரணத்திற்கு)
- 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 2 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய்
- தேவைக்கேற்ப உப்பு
- 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 1 எலுமிச்சம்பழம்
- மேல்மாவு (வெஜிடபிள் போண்டா செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
செய்முறை
- வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை எடுத்துவிட்டு சூடாக இருக்கும்போதே மசித்துக் கொள்ளவும்.
- மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலந்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
- கொத்தமல்லியையும் சேர்த்துப் பிசைந்து உருண்டைகள் செய்யவும்.
- வெஜிடபிள் போண்டாவில் கூறியபடி கடலை மாவு கலவை கலந்து உருண்டைகளை அதில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- கவனிக்க: இந்த போண்டாவிற்கு, வெங்காயத்தை வதக்காமல் அப்படியே பச்சையாகவே கலந்து போட வேண்டும்.
- மாற்று செய்முறை: வெங்காயத்தை வதக்கி உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து மசாலா தயாரித்து போண்டா செய்யவும்.