
பஃப் டப்பிகள்
சைவம்அதிக அடுக்குகள் கொண்ட பஃப் பேஸ்ட்ரி வட்டங்களை உள்ளீடற்ற டப்பிகளாக சுட்டு மசாலா காய்கறி நிரப்பி மூடி வைத்து பரிமாறப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 60 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 85 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்சிற்றுண்டி
பொருட்கள்
- மைதா மாவு (வெஜிடபிள் பஃப் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி மாவும் அடுக்குகளும் தயாரிக்கவும் (இங்கே வழக்கத்தை விட அடுக்குகள் அதிகமாக இருக்க வேண்டும்))
- மசாலா (வெஜிடபிள் பஃப் செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
- துருவிய சீஸ் (விருப்பப்பட்டால், மேலே தூவ)
செய்முறை
- குறிப்பு 25-ல் கூறியுள்ளபடி பஃப் மாவு பிசைந்து அடுக்குகள் தயாரித்ததும் 1/2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஈரத்துணியால் மூடி வைக்கவும். பஃப் செய்வதை விட அடுக்குகள் அதிகமாக இருக்க வேண்டும்.
- வட்ட வடிவமான இரண்டு பிஸ்கட் கட்டர் 4 அங்குல விட்டத்திலும், 3 அங்குல விட்டத்தில் இருக்கும்படியும் எடுத்துக் கொள்ளவும். முதலில் 4 அங்குல விட்டத்தில் உள்ளதை உபயோகப்படுத்தி பஃப் பேஸ்ட்ரியை கட் செய்து கொள்ளவும். அடுத்ததை அதன் மேலே முக்கால் பாகம் மட்டும் உள்ளே போகும்படி அழுத்தி அவனில் 10 நிமிடம் பேக் செய்யவும்.
- கத்தியின் உதவியால் அந்த அடுக்குகளை பத்திரமாக மேலே தூக்கி எடுக்கவும் (மூடி போல உபயோகப்படுத்த வேண்டும்). மறுபடியும் பொன்னிறமாக வரும்வரை பேக் செய்யவும். பேக் செய்த பிறகு உள்ளே மசாலாவை நிரப்பி தனியாக எடுத்துவைத்த அடுக்கு மூடியை மேலே வைத்து டப்பிகள் போல பரிமாறவும்.
- குறிப்பு: வனஸ்பதி அல்லது மார்ஜரின் மட்டும் உபயோகப்படுத்தாமல் இரண்டும் கலந்தோ அல்லது சிறிது வெண்ணெயும் அதோடு கலந்தோ பஃப் தயாரிக்கலாம். மாற்று செய்முறை: விருப்பப்பட்டால் மசாலாவின் மேல் சிறிதளவு துருவிய சீஸ் (Cooking Cheese) தூவி சில நிமிடங்கள் பேக் செய்து பரிமாறலாம்.