காய்கறி பான் கேக்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

காய்கறி பான் கேக்

சைவம்

பச்சை காய்கறி துருவலை மெல்லிய மைதா தகட்டில் சுருட்டி சுருள் வடிவமாக்கி மறுபடியும் தட்டி தோசைக் கல்லில் மொறுமொறுப்பாக சுடப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
60 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 3 கப் மைதா (குவித்து)
  • 1 1/2 டீஸ்பூன் பொடி உப்பு
  • தண்ணீர் (மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள்
  • 1/4 கப் துருவிய கேரட்
  • 1/4 கப் துருவிய முட்டைக்கோஸ்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெள்ளை வெங்காயம்
  • 1 1/2 டீஸ்பூன் மெலிதாக நறுக்கிய பச்சை மிளகாய் (விதைகளை எடுத்துவிடவும்)
  • சிறிது உப்பு (பூரணத்திற்கு)

செய்முறை

  1. மைதா மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தளர்த்தியான மாவாகப் பிசையவும் (போளிக்குப் பிசைவதைப் போல). நன்றாக 5 அல்லது 10 நிமிடங்களுக்கு அடித்துப் பிசையவும் (எண்ணெய் எதுவும் சேர்க்க வேண்டாம்). ஈரத்துணி கொண்டு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
  2. பூரணம் செய்யும் முறை: பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள், துருவிய கேரட், துருவிய முட்டைக்கோஸ், பொடியாக நறுக்கிய வெள்ளை வெங்காயம், மெலிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பச்சையாகவே ஒன்றாக சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
  3. சிறிய உருண்டைகள் செய்து மைதாமாவில் புரட்டி எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இடவும். சப்பாத்தியின் மேலே சிறிது எண்ணெயை பரவலாகத் தடவவும். அதன்மேலே காய்கறி பூரணத்தை மெல்லிய லேயராகப் பரப்பவும்.
  4. ஒரு ஓரத்திலிருந்து பாய் போல சுருட்டவும். சுருட்டிய சிலிண்டர் வடிவமுள்ள சப்பாத்தியை ஓயர் சுற்றுவதுபோல சுருட்டவும் (கைமுறுக்கு வடிவத்தில்).
  5. மறுபடியும் இதை மைதா மாவில் புரட்டி எடுத்து உள்ளே உள்ள மசாலா வெளியில் வராதபடிக்கு சிறிது கனமான சப்பாத்தி போல இடவும். தோசைக் கல்லில் சிறிது அதிகமாக எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு சிவப்பாக மொறு மொறுவென்று வரும்வரை சுடவும்.
  6. தொக்கு அல்லது சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.