
வெஜிடபிள் ஃபிங்கர்ஸ்
சைவம்பாசிப்பருப்பு-காய்கறி மாவை இட்லி போல ஆவியில் வேக வைத்து விரல் வடிவில் வெட்டி பொன்னிறமாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 1/2 கப் பாசிப் பருப்பு
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் நசுக்கிய பச்சைமிளகாய்
- 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் மிகப் பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், காலிபிளவர், முட்டைக்கோஸ்)
- தேவையான அளவு உப்பு
- 3 டேபிள் ஸ்பூன் புளித்த கெட்டித் தயிர்
- 1/4 டீஸ்பூன் சமையல் சோடா
- எண்ணெய் (தேவையான அளவு, பொரிக்க)
செய்முறை
- பருப்பைக் கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்து விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியில் உப்பு சேர்க்கவும்.
- நறுக்கிய காய்கறிகளை ஆவியில் வேக வைக்கவும். சிறிது எண்ணெயை வாணலியில் விட்டுச் சூடாக்கி இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்க்கவும். வதங்கியதும் வேகவைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து இறக்கவும்.
- வதங்கிய காய்கறிகளை அரைத்த பருப்பு விழுதுடன் கலந்து தயிர், சோடா சேர்க்கவும். நன்றாகக் கலந்து எண்ணெய் தடவிய பெரிய குக்கர் தட்டில் பரப்பி இட்லி போல ஆவியில் வேக வைக்கவும் (10-12 நிமிடம்).
- வெந்ததும் இறக்கி நன்றாக ஆற வைக்கவும். இதை விரல்கள் போல வெட்டிக் கொள்ளவும். சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து சூடாகப் பரிமாறவும்.