
வெஜிடபிள் போண்டா
சைவம்ஆவியில் வேகவைத்த மசாலா கலவை காய்கறிகளை உருண்டையாக்கி கடலைமாவு மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரிக்கப்படும் போண்டா.
- தயாரிப்பு நேரம்
- 35 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 55 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்பொண்டா வகைகள்
பொருட்கள்
- 1 கப் கடலை மாவு (மேல் மாவிற்கு)
- 1/3 கப் அரிசி மாவு (மேல் மாவிற்கு)
- தேவைக்கேற்ப உப்பு (மேல் மாவிற்கு)
- 3/4 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி (மேல் மாவிற்கு)
- 2 சிட்டிகை சமையல் சோடா (மேல் மாவிற்கு)
- 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் (காய்கறி மசாலாவிற்கு)
- 3 கப் பொடியாக அரிந்த காய்கறித் துண்டுகள் (உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிப்ளவர், பீட்ரூட்)
- 1/4 கப் உரித்த பட்டாணி
- 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- 1 1/2 டீஸ்பூன் நசுக்கிய பச்சை மிளகாய்
- தேவைக்கேற்ப உப்பு (காய்கறி மசாலாவிற்கு)
- 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- எண்ணெய் (பொரிப்பதற்குத் தேவையான அளவு)
- 1 எலுமிச்சம்பழம்
செய்முறை
- நறுக்கிய காய்கறிகளில் தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் (பிரஷர் குக்கரில்) வேக வைக்கவும்.
- வெந்தபின் அதில் ஈரப்பசை இருந்தால் ஒரு வடிகட்டியின் உதவியால் வடிய வைக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதிலேயே மிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேந்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
- பெரிய அனலில் சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
- ஈரம் நன்கு வற்றி காய்கறிக் கலவை ஒன்றுசேர்ந்து வரும்போது உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்றாகக் கலக்கவும்.
- மசாலா நன்கு ஆறியதும் எலுமிச்சங்காயளவு உருண்டைகள் செய்யவும்.
- சலித்த கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடா, மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டி தட்டாமல் மாவைத் தயாரிக்கவும் (தோசைமாவு பக்குவத்தில்).
- செய்து வைத்துள்ள மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் கொள்ளுமளவிற்குப் போட்டு பொரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.