வாழைக்காய் குழம்பு

வகைகள்கறி

பொருட்கள்

  • 2 எண்ணம் வாழைக்காய்
  • 1 ஸ்பூன் மஞ்சள்த் தூள்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • சுவைக்கு ஏற்ப உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 கரண்டி சீரகத்தூள்
  • சிறிதளவு தேங்காய் துருவல்
  • 3 பற்கள் பூண்டு

செய்முறை

  1. வாழைக்காய் தோல் சீவிய பின் நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாழைக்காய் துண்டுகளுடன் தேவையான தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இத்துடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் சில நிமிடங்கள் வைத்து இறக்கி பரிமாறவும்.