
தக்காளி கெட்ச்அப்
சைவம்முழு தக்காளியை வேகவைத்து, தோலுரித்து, மசாலா மூட்டையுடன் கொதிக்க வைத்து கெட்டியாக்கி பாட்டிலில் தயாரிக்கப்படும் வீட்டு தக்காளி கெட்ச்அப்.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 45 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 75 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சட்னி
பொருட்கள்
- 1 கிலோ தக்காளி
- 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- 1/2 கப் வினிகர் (புளிப்பு காடி)
- 1/4 டீஸ்பூன் பொட்டாசியம்-மெடா-பை-சல்பைட் (K.M.S.)
- 3 பட்டை (சிறிய துண்டுகள்; கீழேயுள்ளவற்றுடன் கரகரப்பாக பொடி செய்து மெல்லிய துணியில் மூட்டையாக கட்டவும்)
- 4 இலவங்கம் (மூட்டைக்கு)
- 4 ஏலக்காய் (மூட்டைக்கு)
- 4 பல்லு பூண்டு (மூட்டைக்கு)
- 6 (அ) 1/2 உரித்த சிறிய வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் (மூட்டைக்கு)
- 1/2 டீஸ்பூன் சீரகம் (மூட்டைக்கு)
- 1/2 டீஸ்பூன் மிளகு (மூட்டைக்கு)
- 3 பச்சை மிளகாய் (மூட்டைக்கு)
செய்முறை
- நன்றாக பழுத்த கெட்டியான சிகப்பு தக்காளியை வாங்கவும்.
- காம்பின் பக்கம் பச்சையான பாகம் இருந்தால் அறுத்து எடுத்துவிடவும்.
- ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டுச் சூடாக்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது முழு தக்காளிகளையும் அதில் போட்டு ஒரு கொதிவரும் வரை சூடாக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- தண்ணீரை வடித்துவிட்டு தக்காளியின் தோலை எடுத்துவிட்டு நன்றாக அரைத்து வடிகட்டவும்.
- வடிகட்டிய தக்காளி ஜூஸை பெரிய பாத்திரத்தில் விட்டு மெல்லிய துணி மூட்டையை அதில் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
- தக்காளி கொதித்து மூன்றில் ஒரு பாகமாக ஆனதும் கெட்டியாக, உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இறக்கியதும் வினிகர் மற்றும் பொட்டாசியம்-மெடா-பை-சல்பைட் சேர்த்து கலக்கவும்.
- நன்றாக ஆறியதும் மூட்டை கட்டிப் போட்ட பையை எடுத்து எறிந்து விடவும்.
- சுத்தமான, ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும்.