
இனிப்பு மாங்காய்
சைவம்தோலுரித்து துண்டுகளாக வெட்டிய மாங்காயை வெங்காயம், மிளகாயுடன் வதக்கி வேகவைத்து, கடைசியில் சீனி அல்லது வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் காரம்-புளிப்பு-இனிப்பு கலந்த மாங்காய் கறி.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்கறி
பொருட்கள்
- நல்ல பெரிய மாங்காய் (தோலுரித்து தகடாக வெட்டியது)
- 4 வெங்காயம் (நறுக்கியது)
- 2 பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- 1 கரண்டி எண்ணெய்
- கடுகு (தாளிக்க)
- தேவைக்கேற்ப உப்பு
- தேவைக்கேற்ப சீனி அல்லது தட்டிய வெல்லம்
செய்முறை
- நல்ல பெரிய மாங்காய்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கழுவி சுத்தம் செய்து விட்டு தோலைச் சீவி பெரிய துண்டுகளாக தகடாக சில்சில்லாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை இவைகளை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை போட்டு சிவந்ததும் மாங்காய் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து வேக வைக்கவும்.
- நன்றாக வெந்தபின் கரண்டியால் மசித்துவிட்டு தேவையான சீனி அல்லது தட்டிய வெல்லம், சேர்த்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும். மாங்காய் கூழ் போல் வெந்த பிறகு தான் சீனியை சேர்க்க வேண்டும்.
- இந்த தயாரிப்பில் காரம், புளிப்பு, இனிப்பு, உப்பு ஆகிய சுவைகள் கலந்திருக்கும்.