சுசியம்

வகைகள்இனிப்பு

பொருட்கள்

  • 500 மி.லி. கடலைப்பருப்பு
  • 5 ஏலக்காய்
  • 125 மி.லி. உளுந்தம்பருப்பு
  • 500 மி.லி. மேல் மாவிற்குப் பச்சரிசி
  • 100 கிராம் வெல்லம்
  • 1 தேங்காய்

செய்முறை

  1. கடலைப்பருப்பை அரை வேக்காட்டில் அவித்து தண்ணீர் வடிகட்டி, வெல்லம் ஏலக்காய் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்து, தேங்காய்ப்பூவையும் போட்டு கலந்து உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். பச்சரிசியையும், உளுந்து பருப்பையும் ஒன்றாக நனைய வைத்து அரை உப்புப் போட்டு பஜ்ஜிக்கு அரைப்பது போல் ஆட்டி கடலைப்பருப்பு உருண்டைகளை மாவில் தேங்காய் எண்ணெயை வாணலியில் காய வைத்து சுடவும்.