
ஸ்டப் செய்த தக்காளி
சைவம்தக்காளி டப்பிகளுக்குள் வதக்கிய காய்கறி-சதைப் பாகம் மசாலா நிரப்பி சீஸ் தூவி பேக் செய்யப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்சிற்றுண்டி
பொருட்கள்
- 8 ஒரே அளவான தக்காளி
- 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
- 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள்
- 1/2 கப் வேகவைத்த பட்டாணி
- 1/2 கப் பொடியாக அரிந்து வேகவைத்த கேரட், காலிப்ளவர்
- 2 டீஸ்பூன் வோர்செஸ்டர்ஷயர் சாஸ்
- தேவையான அளவு உப்பு
- 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- 2 டேபிள் ஸ்பூன் துருவிய சீஸ்
- எண்ணெய் (சூடுவதற்கு)
- 2 டீஸ்பூன் மிளகாய் சாஸ் (அ) குடமிளகாய் சாஸ்
செய்முறை
- பழுத்த, கெட்டியான ஒரே அளவுள்ள தக்காளியை வாங்கவும். கூம்பான பகுதியில் மெல்லிய மூடி போல கூரான கத்தி கொண்டு வெட்டவும். உள்ளே சதைப் பாகத்தையும் விதைகளையும் ஸ்பூன் உதவியால் பத்திரமாக எடுக்கவும். தலைகீழாக ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை சிவக்க வதக்கவும். தக்காளியின் உள்ளே இருந்து எடுத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் வற்றியதும் காய்கறி சேர்த்து வதக்கவும்.
- கடைசியில் உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாஸ் வகைகள் சேர்த்து மெல்லிய அனலில் மேலும் சில நிமிடங்கள் கெட்டியாகும் வரை கிளறவும்.
- ஆறியதும், தக்காளியின் உள்ளே இந்த மசாலாவை நிரப்பி மேலே துருவிய சீஸ் தூவி, சூடாக்கிய ஓவனில் (Oven - 180°C) பேக் செய்யவும். மேலே உள்ள சீஸ் உருகி சிறிது நிறம் மாறத் தொடங்கியதும் ஓவனில் இருந்து எடுத்து அலங்காரமாகத் தட்டில் வைத்து பரிமாறவும்.