மிளகாய் பஜ்ஜி-இன் புகைப்படம், வெங்காயம், இனிப்பு சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

மிளகாய் பஜ்ஜி

சைவம்

நீள பஜ்ஜி மிளகாய்களுக்குள் தேங்காய்-பொட்டுக்கடலை பூரணம் நிரப்பி கெட்டியான மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரிக்கப்படும் மிளகாய் பஜ்ஜி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்பஜ்ஜி

பொருட்கள்

  • 1/4 கிலோ பச்சை மிளகாய் (நீள பஜ்ஜி மிளகாய்)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 2 டேபிள் ஸ்பூன் கொப்பரைத் துருவல் (பூரணத்திற்கு)
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலை (பூரணத்திற்கு)
  • சிறிது புளி (பூரணத்திற்கு)
  • தேவைக்கேற்ப உப்பு (பூரணத்திற்கு)
  • 1/2 டீஸ்பூன் ஓமம் (அ) சீரகம் (பூரணத்திற்கு)
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் (மேலே அலங்கரிக்க, பூரணத்திற்கும்)
  • 1 (அ) 2 எலுமிச்சம்பழம் (மேலே அலங்கரிக்க)
  • 1/4 கப் இனிப்பு சட்னி (மேலே அலங்கரிக்க)
  • 2 கப் கடலை மாவு (பஜ்ஜி மாவிற்கு)
  • 1/4 கப் அரிசி மாவு (பஜ்ஜி மாவிற்கு)
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா (பஜ்ஜி மாவிற்கு)
  • உப்பு & மிளகாய்ப் பொடி (பஜ்ஜி மாவிற்கு, தேவைக்கேற்ப)
  • 3 சிட்டிகை சமையல் சோடா (பஜ்ஜி மாவிற்கு)

செய்முறை

  1. பச்சை மிளகாயைக் கழுவி துடைத்து ஒரு கூர்மையான கத்தியால் கீறி உள்ளே உள்ள விதைகளை எடுத்துவிடவும்.
  2. ஒவ்வொரு மிளகாயின் உள்ளும் பொடித்த கலவையை சிறிதளவு திணிக்கவும்.
  3. பஜ்ஜி மாவை எப்பொழுதையும்விட சிறிது கெட்டியாகக் கலக்கவும். மிளகாய்ப் பொடியை கொஞ்சமாகச் சேர்க்கவும்.
  4. ஸ்டப் செய்த மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  5. பரிமாறுவதற்கு முன்பு கூரான கத்தியால் பஜ்ஜியின் மேல் பாகத்தைக் கீறிப் பிளந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு வைத்து எலுமிச்சை ரசம் சிறிதளவே பிழிந்துவிட்டு இனிப்பு சட்னியை சிறிதளவு மேலே விட்டு பரிமாறவும்.
  6. கவனிக்க: கொஞ்சம் கனமாக, நீளமாக பஜ்ஜி மிளகாய் என்று கிடைக்கும் மிளகாயையே இதற்கு உபயோகப்படுத்தவும். கிடைக்காதவர்கள் காரமான பச்சைமிளகாயைக் கீறி சிறிது உப்பு போட்டு பிசறி வைத்து, பிழிந்தெடுத்து எண்ணெயில் முதலில் காரம் போக பொரித்துவிட்டு பிறகு பஜ்ஜி போடலாம். மாவைக் கெட்டியாகக் கலப்பதால் பஜ்ஜியின் மேல் சிறிது கனமாக பிடித்துக் கொள்ளும், அதனால் மிளகாயின் காரம் தெரியாது. மிளகாயை சிறிது நேரம் எலுமிச்சம்பழ ரசத்தில் ஊறவைத்து பிறகும் பஜ்ஜி போடலாம்.
  7. மாற்று செய்முறை: (1) மிளகாய் மிகவும் நீளமாக இருந்தால் குறுக்கில் இரண்டாக வெட்டி பிறகு மசாலாவை உள்ளே நிரப்பி பொரிக்கவும். (2) மிளகாயை நீளவாக்கில் இரண்டாக அரிந்து விதையை முழுவதுமாக எடுத்துவிடவும். சிறிதளவு புளி, பொரிகடலை, உப்பு, வெல்லம், பூண்டு, இஞ்சி இவற்றோடு 2 சிகப்பு மிளகாய் சேர்த்து கெட்டியாகச் சட்னி அரைக்கவும். பிளந்த மிளகாயின் உள்பாகத்தில் இந்த சட்னியை சிறிதளவு பூசி அதற்குப் பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்துப் போடவும்.