காரக் கட்லெட்-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

காரக் கட்லெட்

சைவம்

மசாலா உருளைக்கிழங்கு-ஆவியில் வேகவைத்த கலவை காய்கறிகளை நனைத்த பிரட்டுடன் கலந்து கட்லெட் வடிவில் பொன்னிறமாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
50 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்கட்லெட் வகைகள்

பொருட்கள்

  • 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  • 1/2 கப் பட்டாணி
  • 100 கிராம் பீன்ஸ்
  • 1/4 கிலோ கேரட்
  • 200 கிராம் முட்டைக்கோஸ்
  • 6 துண்டுகள் ரொட்டி
  • 1/2 கப் காய்ந்த ரொட்டித் தூள்
  • 2 வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது
  • தேவைக்கேற்ப உப்பு
  • 3/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு
  • எண்ணெய் (சுடுவதற்கு)

செய்முறை

  1. வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொடியாக அரியவும். உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மேல் பாத்திரத்தில் மற்ற காய்களை ஆவியில் (தண்ணீர் விடாமல்) வேக வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை தோல் எடுத்து கட்டியில்லாமல் நன்றாக மசிக்கவும். மற்ற வெந்த காய்கறிகளை சிறிதுகூட தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி இஞ்சி மிளகாய் விழுது, வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு அதில் பிழிந்து வைத்துள்ள காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். கடைசியில் உப்பு, கரம்மசாலாத் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
  4. பிரட் துண்டங்களை ஒவ்வொன்றாக தண்ணீரில் முக்கி எடுத்து கெட்டியாய் பிழிந்து மசாலாவில் சேர்க்கவும். மக்காச்சோள மாவு, பாதி காய்ந்த ரொட்டித் தூள் ஆகியவற்றையும் காய்கறிக் கலவையோடு கலந்து கெட்டியான சப்பாத்தி மாவு போலாக்கவும்.
  5. கைகளால் உருண்டை செய்து விருப்பமான வடிவில் தட்டி மீதி உள்ள பிரட் தூளில் புரட்டி எடுக்கவும். சூடான எண்ணெயில் பொரித்து சூடாகப் பரிமாறவும் அல்லது தோசைக்கல்லில் அதிக எண்ணெய் விட்டு பொன்னிறமாகச் சுட்டும் பரிமாறலாம்.