
புளி வடை அல்லது புலுசு வடை
சைவம்புழுங்கல் அரிசியை மிளகாய், வேகவைத்த பூசணிக்காய், புளியுடன் அரைத்து கடலைப்பருப்பு சேர்த்து பொரிக்கப்படும் புளி வடை.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 1 கப் புழுங்கல் அரிசி
- 1 கப் பொடியாக நறுக்கிய சிவப்பு பூசணிக்காய்
- 10 சிகப்பு மிளகாய்
- நெல்லிக்காய் அளவு புளி
- தேவைக்கேற்ப உப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
- 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு (1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்)
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- அரிசியைக் கழுவி இளஞ்சூடான தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அரைக்கும்போது மிளகாய், வேகவைத்த பூசணிக்காய், ஊறவைத்த புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும் (தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்).
- அரைத்த மாவோடு ஊறவைத்த கடலைப் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலைத் தழை, பெருங்காயப் பொடி சேர்த்து கலக்கவும்.
- எலுமிச்சையளவு உருண்டைகள் செய்து ஒரு ஈரத்துணியின் மேல் மெல்லிய வடையாகத் தட்டி எடுத்து எண்ணெயில் பொரிக்கவும்.
- மாற்று செய்முறை: (1) புழுங்கலரிசியோடு 1/4 கப் பச்சரிசியும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். (2) பூசணிக்காய்க்கு பதில் கைப்பிடி அளவு ஊறவைத்த துவரம்பருப்பும் 1½ டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயும் சேர்த்தரைக்கவும். (3) பூசணிக்குப் பதிலாக வேகவைத்த குச்சிவெள்ளிக் கிழங்கு சேர்த்தரைத்து வடை செய்யவும்.