தோசைமாவு போண்டா-இன் புகைப்படம், தேங்காய் சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது

தோசைமாவு போண்டா

சைவம்

மிச்சமான புளித்த தோசைமாவை கடலைப்பருப்பு, வெங்காயத்துடன் கலந்து சிறு உருண்டைகளாக கிள்ளி பொரிக்கப்படும் போண்டா.

தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
30 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்பொண்டா வகைகள்

பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1/3 கப் உளுத்தம் பருப்பு
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு (1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்)
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 10 நறுக்கிய பச்சை மிளகாய்
  • எண்ணெய் (சுடுவதற்கு)
  • 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை

செய்முறை

  1. அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊற வைத்து அரைக்கவும்.
  2. கடைசியாக உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. மாவை 2 நாள் புளிக்க விடவும்.
  4. புளித்த மாவில் ஊற வைத்த கடலைப் பருப்பு, வெங்காயம், வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
  5. கைகளை தண்ணீரில் தோய்த்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி சிறிய உருண்டைகளாக சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரிக்கவும்.
  6. சட்னி அல்லது தொக்குடன் பரிமாறவும்.
  7. குறிப்பு: எப்போதும் முதல் நாள் அரைத்த தோசைமாவு மிகுதியாகி, மாவு புளித்து விட்டால் இந்த போண்டா போடுவது வழக்கம். மாவு நீர்க்க இருந்தால் போண்டா சரியாக வராது. மாவிலேயே 2 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசியைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிட்டால் மாவு கெட்டியாகி விடும். அதன் பிறகு இதே போல போண்டா போடலாம்.