பாப் கார்ன்-இன் புகைப்படம், மசாலா தூவப்பட்டுள்ளது

பாப் கார்ன்

சைவம்

மசாலா எண்ணெயில் அடுப்பில் பொரிக்கப்படும் பாப்கார்ன், உப்பு, மிளகு, கரம்மசாலாவுடன் தயாரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
25 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 1/4 கப் காய்ந்த மக்காச்சோள விதை
  • 1/4 டீஸ்பூன் பொடி உப்பு
  • சிறிதளவு கருப்பு உப்பு பொடி
  • 1/4 டீஸ்பூன் மிளகுப் பொடி
  • 1/4 டீஸ்பூன் கரம்மசாலா பொடி
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 சிட்டிகை மஞ்சள் பொடி

செய்முறை

  1. ஒரு அகலமான பெரிய வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும்.
  2. எண்ணெய் நன்கு சூடானதும் அனலை நன்கு குறைத்துவிட்டு, தேவைப்படும் அளவு பொடி வகைகளையும் ஒரு கைப்பிடி அளவு சோள விதையையும் போட்டு வாணலியின் மேல் பாகத்திற்கு சரியாகப் பொருந்தும்படி ஒரு மூடியால் மூடி அனலை சிறிது அதிகரிக்கவும்.
  3. சோள விதைகள் பொரிந்து சப்தம் அடங்கியதும் மூடியை எடுத்துவிட்டு வேறு கிண்ணத்தில் கொட்டவும்.
  4. இதை போல எல்லா விதைகளையும் பொரிக்கவும்.
  5. காற்றுப்புகாத பாட்டிலில் மூடி வைத்து பரிமாறவும்.
  6. குறிப்பு: (1) பாப்கார்ன் செய்வதற்கென்றே கிடைக்கும் விதைகளையே பயன்படுத்த வேண்டும். விதை சோளத்தை உபயோகித்தால் நன்றாக வராது. (2) ஒரு கைப்பிடி அளவிற்கு மேல் ஒரே நேரம் போட வேண்டாம். கைப்பிடி அளவு பொரித்தாலே வாணலி நிறைய பாப்கார்ன் கிடைக்கும்.