பெசலு கடியாலு-இன் புகைப்படம், தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

பெசலு கடியாலு

சைவம்

பாசிப்பருப்பு-உளுத்தம்பருப்பு-வாழைப்பழம் மாவை வளையமாக சூடான எண்ணெயில் ஊற்றி பொரித்து பாயசத்துடன் பரிமாறப்படும் பாரம்பரிய சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
25 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
6
கடினத்தன்மை
கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி

பொருட்கள்

  • 3 கப் பாசிப் பருப்பு
  • 1 பழுத்த வாழைப்பழம்
  • தேவையான அளவு உப்பு
  • 3/4 கப் கழுவி காய வைத்த அரிசி மாவு (தயாரிப்பு முறை குறிப்பில்)
  • எண்ணெய் (வேண்டிய அளவு)
  • 1/4 கப் உளுத்தம் பருப்பு

செய்முறை

  1. அரிசிமாவு தயாரிப்பு: பச்சரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து, வடித்து நிழலில் துணி விரித்து காய வைக்கவும். மிஷினில் கொடுத்து மாவாகத் திரித்த பின் 2 நாள் நிழலில் காயவைத்து சலித்து எடுத்து வைக்கவும். தேவைப்பட்ட போது உபயோகப்படுத்தலாம்.
  2. பாசிப் பருப்பை கழுவி உளுத்தம் பருப்போடு சேர்த்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  3. ஊறிய பருப்பு வகைகளை கெட்டியாக அரைக்கவும். கடைசியில் அரிசி மாவு, உப்பு, மசித்த வாழைப்பழம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
  4. ஒரு சிறிய வாணலியில் முக்கால் பாகம் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். மாவை பாலாடை போல மூக்கு உள்ள ஒரு கிண்ணத்தில் முக்கி எடுத்து எண்ணெயில் சுற்றி வட்ட வடிவத்தில் ஊற்றவும் (ring shape). முனைகள் சரியாக ஒன்று சேர்வது போல ஊற்றவும்.
  5. கீழ்ப்பாகம் வெந்ததும் ஒரு குச்சியின் உதவி கொண்டு மெதுவாகத் திருப்பிப் போடவும். பொன்னிறமானதும் குச்சியின் உதவியால் எடுத்து எண்ணெயை வடியவிட்டு பரிமாறவும்.
  6. இதற்குத் தொட்டுக் கொள்ள பாசிப்பருப்பு பாயசம், தேங்காய் சட்னியுடன் பரிமாற வேண்டும். பாயசம்: பாசிப்பருப்பை லேசாக வறுத்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பருப்பு பதமாக வெந்ததும் சம அளவு துருவிய வெல்லம் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.