
பெருகு வடை
சைவம்தயிரில் வேகவைத்த அரிசி மாவை மிளகாய் விழுது, கடலைப்பருப்புடன் பிசைந்து மென்மையாக இருக்கும்படி லேசாக பொரிக்கப்படும் பெருகு வடை.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்வடை சமையல் குறிப்புகள்
பொருட்கள்
- 1 கப் புளித்த கெட்டித் தயிர்
- 1 கப் அரிசி மாவு (அரிசியை ஊறவைத்து நிழலில் உலர வைத்து தயாரித்தது)
- 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
- தேவைக்கேற்ப உப்பு
- 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்த கடலைப் பருப்பு
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- தயிரைக் கடைந்து அதோடு 1/4 கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
- அடி கனமான வாணலி அல்லது வெண்கல உருளியில் கடைந்த தயிரைக் கொட்டி, உப்பு சேர்த்து குறைந்த தணலில் சூடாக்கவும்.
- கொதி வரும்போது, மத்தியில் அரிசி மாவை அப்படியே கொட்டி, உடனே ஸ்டவ்வை அணைத்து விடவும்.
- தட்டையான கரண்டியால் உடனே வேகமாகக் கலந்து விடவும் (அப்போதுதான் கட்டி தட்டாது).
- கை பொறுக்கும், சூடு வந்ததும் நன்றாகப் பிசைந்து விடவும். கடைசியில் மிளகாய்விழுது ஊறவைத்த கடலைப் பருப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.
- சிறிய எலுமிச்சையளவு உருண்டை செய்து, கைகளால் ஒரு வாழையிலையின் மீது அல்லது பாலீதீன் கவரின் மீது மெலிதாகத் தட்டவும்.
- தட்டிய வடையை மிதமான சூடுள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- குறிப்பு: இதை அதிக நேரம் பொரிக்கக் கூடாது. இந்த வடை மெத்தென்றுதான் இருக்கவேண்டும். ஒருபுறம் சிவந்ததும் திருப்பிப் போட வேண்டாம். லேசாகக் கலர் மாறியதும் எடுத்து எண்ணெயை நன்றாக வடித்து விட்டு பரிமாறவும்.