
மிளகு மட்டன் மசாலா
அசைவம்குக்கரில் வேகவைத்த மட்டனை இலவங்கப்பட்டை, பிரியாணி இலையுடன் கூடிய மிளகு வெங்காய-தக்காளி மசாலாவில் முடிக்கப்படும்.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 35 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கறி
பொருட்கள்
- ½ கிலோ மட்டன் (எலும்பு நீக்கியது)
- 4 பெ. வெங்காயம்
- 2 டேபிள் ஸ்பூன் மிளகு, சீரகத்தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
- 2 பச்சை மிளகாய்
- தேவையானது உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- 3 தக்காளி
- 1 டீஸ்பூன் கறிமசால் தூள்
செய்முறை
- மட்டனை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்க இலை தாளித்து, வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கவும். அடுத்து மிளகு, சீரக தூள், தக்காளி, ப.மிளகாய், கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும். தண்ணீர் லேசாக ஊற்றவும். பின்பு வேக வைத்த கறியை இக்கலவையில் சேர்த்து சுண்ட வதக்கி விடவும். அதன் மீது நறுக்கிய வெங்காயத்தை தூவி பரிமாறவும்.