பார்ஸி கோழிக்கறி
பார்ஸி கோழிக்கறி
வகைகள்கறி
பொருட்கள்
- 1 கிலோ கோழிக்கறித் துண்டுகள்
- 1 துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
- 10 வரமிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 கப் முந்திரிப் பருப்பு
- 2 பெ. வெங்காயம்
- 3 டேபிள் ஸ்பூன் தக்காளி கெச்சப்
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- இஞ்சி, பூண்டை நைசாக அரைத்து கோழிக்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைசாக அரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும் நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப் பருப்பு விழுது, தக்காளி கெச்சப், சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும். இக்கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்.