
பனீர் பக்கோடா
சைவம்பச்சை பனீரை கடலைமாவு, வெங்காயம், முந்திரி, புதினா, கொத்தமல்லியுடன் கலந்து பொன்னிற பக்கோடாவாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 1 கப் பனீர் (திரித்த பாலிலிருந்து செய்து கைகளால் உதிரியாக்கவும்)
- 1/2 கப் கடலை மாவு
- 1/4 கப் அரிசி மாவு
- 1/2 கப் நீளவாக்கில் அரிந்த வெங்காயம்
- தேவைக்கேற்ப உப்பு
- 1/2 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
- 10 நறுக்கிய முந்திரி
- 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாத் தழை
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
செய்முறை
- கொதிக்கும் பாலை சிட்ரிக் ஆசிட் உபயோகித்து திரித்து வடிகட்டி 1 மணி நேரம் தொங்கவிடவும்.
- தண்ணீர் முழுவதும் வடிந்ததும் கைகளினால் கட்டியில்லாமல் உதிரியாக்கவும்.
- இதோடு மற்ற மாவு வகைகளையும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசறிவிடவும்.
- கடைசியில் வெங்காயம், முந்திரி, கொத்தமல்லி, புதினா சேர்த்து லேசாகக் கலக்கவும்.
- இரண்டு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெயை அதில்விட்டு கலக்கவும். கலவையை மூன்று பாகமாகப் பிரிக்கவும்.
- முதல் பாகத்தில் தேவைப்பட்டால் சிறிதளவே தண்ணீர் தெளித்து மாவு ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளும்படி பிசறிவிடவும். கைகளினால் கலவையை எடுத்து சூடான எண்ணெயில் நேரடியாக பெரிய துண்டங்களாகப் பிரித்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- ஒரு பாகம் மாவு தீர்ந்தபின் அடுத்த பாகத்திற்கு தண்ணீர் தெளித்து கலக்கவும். உடனே எண்ணெயில் பொரிக்கவும்.
- சூடாக உடனே பரிமாறினால் சுவையாக இருக்கும். மிச்சம் இருப்பதை ஆறியதும் டப்பாவில் போட்டு வைத்தால் 3 நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.