முள்ளங்கி வடை-இன் புகைப்படம், முழு முள்ளங்கியுடன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது

முள்ளங்கி வடை

சைவம்

துருவிய முள்ளங்கியை அரைத்த மிளகாய்-கொத்தமல்லி விழுது, அரிசி மாவுடன் கலந்து மெல்லிதாக பொரிக்கப்படும் முள்ளங்கி வடை.

தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
40 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்வடை சமையல் குறிப்புகள்

பொருட்கள்

  • 1/4 கிலோ வெள்ளை முள்ளங்கி
  • தேவைக்கேற்ப உப்பு
  • அரிசி மாவு (பிடிக்குமளவு)
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 7 பச்சை மிளகாய் (அரைக்க)
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை (அரைக்க)
  • 1 சிட்டிகை உப்பு (அரைக்க; தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கவும்)

செய்முறை

  1. முள்ளங்கியை நன்றாக கழுவி மெல்லிய துருவியின் உதவியால் துருவிக் கொள்ளவும்.
  2. இதோடு அரைத்த விழுது, உப்பு மற்றும் உருண்டை பிடிக்குமளவிற்கு பச்சரிசி மாவைச் சேர்த்துக் கொள்ளவும்.
  3. சிறு உருண்டைகள் செய்து ஈரத்துணியின் மேல் மெல்லிய வடையாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
  4. பொரிக்கும் போது 3 அல்லது 4க்கு மேல் எண்ணெயில் ஒரே நேரம் போட வேண்டாம்.
  5. அடிப்பாகம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்று கரகரப்பாக ஆனதும் எடுத்து எண்ணெயை நன்றாக வடியவிட்டு சூடாகப் பரிமாறவும்.
  6. குறிப்பு: இந்த மாவை கலந்த உடனே பொரித்து விட வேண்டும். அதிக நேரம் வைக்கக் கூடாது.