
பயத்தம் பருப்பு தயிர் பக்கோடா
சைவம்சிறிய பொரித்த பாசிப்பருப்பு பக்கோடாவை கடைந்த தயிர், மசாலாத் தூள் தூவி பரிமாறப்படும் தயிர் பக்கோடா.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 35 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- எளிது
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 1 கப் பயத்தம் பருப்பு
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- 1 கப் கடைந்த கட்டித் தயிர்
- உப்பு, மிளகாய்ப் பொடி (தேவைக்கேற்ப)
- 1 டீஸ்பூன் தயிர் மசாலா பொடி
- தக்காளி சாஸ் (தேவைக்கேற்ப)
- 1 டீஸ்பூன் சுக்கு பொடி (தயிர் மசாலா பவுடருக்கு)
- 1 டீஸ்பூன் மிளகுப் பொடி (தயிர் மசாலா பவுடருக்கு)
- 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி (தயிர் மசாலா பவுடருக்கு)
- 1 டீஸ்பூன் கருப்பு உப்பு பொடி (தயிர் மசாலா பவுடருக்கு)
செய்முறை
- பருப்பை கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு நுரைக்க வடை மாவு போல அரைக்கவும். உப்பைக் கடைசியில் சேர்த்து ஒரு நிமிடம் அரைத்து பிறகு எடுக்கவும்.
- வாணலியில் எண்ணெயை விட்டுச் சூடாக்கி, கையால் தண்ணீரைத் தொட்டு மாவை சிறுசிறு உருண்டைகளாகப் போண்டா போல பொரித்து எடுக்கவும்.
- வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் ஒரு தட்டில் அடுக்கவும்.
- கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தயிர் மசாலாத் தூள், தக்காளி சாஸ் தெளித்து உடனே பரிமாறவும்.
- தயிர் மசாலா பவுடர்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாகப் பொடி செய்து பிறகு ஒன்றாகக் கலந்து வைக்கவும். இந்த பொடியை எந்தவிதமான தயிர் வடைக்கும் மேலே தூவ உபயோகப்படுத்தலாம்.
- மாற்று செய்முறை: முழுபயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் கைகளால் அளைந்து விட்டு மேலே வரும் தோலை எடுத்துவிடவும். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு அரைக்கவும். தயிரில் போடாமல் பொரித்த பக்கோடாவை அப்படியே சூடாகவும் பரிமாறலாம்.