பச்சைப் பட்டாணி சாட்-இன் புகைப்படம், பூரி துண்டுகள், சேவுடன் தூவப்பட்டுள்ளது

பச்சைப் பட்டாணி சாட்

சைவம்

சீரகம் தாளித்த பச்சைப் பட்டாணியின் மேல் நொறுக்கிய பூரி, வெங்காயம், தயிர், இனிப்பு சட்னி, சேவு தூவி தயாரிக்கப்படும் மட்டர் சாட்.

தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
35 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
நடுத்தரம்
வகைகள்சாட் வகைகள்

பொருட்கள்

  • 2 கப் உரித்த பச்சை பட்டாணி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/4 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி
  • 1/4 டீஸ்பூன் மிளகுப் பொடி
  • 1/2 டீஸ்பூன் கருப்பு உப்புப் பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் சாட் மசாலா பொடி
  • 1 டீஸ்பூன் புதினா பொடி
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித் தழை
  • 1/2 கப் கெட்டியான புளிப்பில்லாத தயிர்
  • 1/4 கப் நொறுக்கிய சிறிய பூரி துண்டுகள்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் இனிப்பு சட்னி (பானி பூரியில் உள்ள சட்னி)
  • 1/4 கப் ஓமப் பொடி (சேவ்)

செய்முறை

  1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி சீரகம் தாளித்து நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து உரித்த பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
  2. சிறிது தண்ணீர் தெளித்து மூடியால் மூடி பட்டாணி நன்கு வேகும்வரை குறைந்த தணலில் வைக்கவும்.
  3. அவ்வப்போது நன்கு கிளறி விட்டு பட்டாணி வெந்து தண்ணீர் வற்றியதும் பொடி வகைகளைச் சேர்த்து கலக்கவும்.
  4. நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பரிமாறும் தட்டில் மாற்றவும்.
  5. பானி பூரி துண்டுகளை அதன் மேல் தூவி, அரிந்த வெங்காயம் அலங்கரித்து கடைந்த தயிரை ஊற்றவும்.
  6. அதற்கும் மேலே இனிப்பு சட்னியை ஊற்றி ஓமப் பொடியை மேலே அலங்கரித்து உடனே பரிமாறவும்.