
பருப்பு கசோரிகள்
சைவம்மைதா மாவு உறையில் மசாலா பாசிப்பருப்பு-உளுந்து பூரணம் நிரப்பி பொரித்து, கொத்தமல்லி மற்றும் இனிப்பு சட்னியுடன் பரிமாறப்படும் கசோரி.
- தயாரிப்பு நேரம்
- 45 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 25 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 70 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி
பொருட்கள்
- 2 கப் மைதா
- 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் உப்பு
- எண்ணெய் (தேவையான அளவு, பொரிக்க)
- 12 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1/3 கப் முழு உளுந்து (தோல் நீக்கியது)
- 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் தனியா பொடி
- 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
- 1/2 டீஸ்பூன் சோம்பு (பொடியாக்கியது)
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 2 டீஸ்பூன் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது
- தேவையான அளவு உப்பு
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 1 எலுமிச்சம் பழம்
செய்முறை
- மேல்மாவு தயாரிக்கும் முறை: மைதா மாவோடு உப்பு, எண்ணெய் சேர்த்து விரல்நுனிகளால் கலக்கவும் (கலந்தபின் பார்ப்பதற்கு பிரட் துகள்கள் போல் இருக்க வேண்டும்). கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாகப் பிசையவும். பல நிமிடங்கள் அடித்துப் பிசைந்து, மாவிற்கு எலாஸ்டிக் தன்மை வரும்வரை பிசையவும். ஒரு மெல்லிய ஈரத்துணி கொண்டு மூடி அதன் மேல் தட்டு வைத்து மூடவும்.
- பூரணம் தயாரிக்கும் முறை: முழு உளுந்தை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பாசிப்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு அகலமான வாணலியில் உளுந்து முழுகும் வரை தண்ணீர் விட்டு வேகவைக்கவும். பருப்பு பாதி வெந்ததும் ஊற வைத்த பயத்தம் பருப்பை சேர்த்து பருப்பு இரண்டும் வெந்து தண்ணீர் வற்றும்வரை குறைந்த தீயில் வைத்து அவ்வப்போது கலக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியதும் கீழே இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
- வேறு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி பொடி செய்த சோம்பு, இஞ்சி மிளகாய் விழுது, தனியா பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து கடைசியில் கடலை மாவு சேர்க்கவும். ஒரு நிமிடம் குறைந்த தீயில் கலந்து உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை, வேகவைத்த பருப்பு சேர்க்கவும். நன்றாக மசித்துக் கலக்கவும். பூரணம் நன்கு பொடியாக வரும்வரை கலந்து இறக்கவும். எலுமிச்சை பழரசம் பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- கசோரி செய்யும் முறை: பிசைந்த மைதா மாவிலிருந்து சிறு உருண்டைகள் செய்யவும். சிறுசிறு பூரிகள் போல தொட்டு இடவும். மத்தியில் எலுமிச்சையளவு பருப்பு பூரணம் வைத்து மூடவும். சுற்றிலும் சிறிது தண்ணீர் தடவி நன்றாக மூடி உருண்டை போல செய்யவும். மேலே லேசாகத் தட்டி உருண்டையை தட்டையாக்கவும். சூடான எண்ணெயில், குறைந்த தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இனிப்பு சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
- கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லித் தழை 1¼ கப், இஞ்சி 2 அங்குலத் துண்டு, புளி சிறிய எலுமிச்சை அளவு, பச்சைமிளகாய் 5, வெல்லம் ருசிக்கேற்ப ஆகியவற்றை சட்னியாக அரைத்து கசோரியுடன் பரிமாறவும்.
- இனிப்பு சட்னி: பானிபூரி செய்முறைக் குறிப்பைப் பார்க்கவும். மாற்று செய்முறை -- பயத்தம் பருப்பு கசோரிகள்: பயத்தம் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, ஊற வைத்த பருப்பு வேண்டிய தண்ணீர் (முழுகும் வரை) சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் வற்றியதும் உப்பு, சர்க்கரை, கொத்துமல்லித் தழை, எலுமிச்சை சாறு, பட்டை, லவங்கப் பொடி சேர்த்து இறக்கவும். இதைப் பூரணமாக உபயோகப்படுத்தி கசோரிகள் செய்யவும்.