எலுமிச்சை சாதம்

வகைகள்சாதம் வகை

பொருட்கள்

  • 200 கிராம் பச்சரிசி
  • 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு
  • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  • சிறிதளவு கருவேப்பிலை
  • 5 சிகப்புமிளகாய்கள்
  • 2 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 2 எலுமிச்சை
  • கொத்தமல்லி தழைகள்

செய்முறை

  1. 200 கிராம் தரமான பச்சரிசியை குழையாமல் வேக வைத்து ஆற விடவும். வாணலியில் 4 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 1 தேக்கரண்டி கடலை பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை, 5 சிகப்புமிளகாய்கள் போட்டுத் தாளிக்கவும். இத்துடன் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். பருப்பு வகைகள் பக்குவமாக சிவந்ததும் இறக்கிக் கொள்ளவும். ஆற வைத்த சாதத்துடன் 2 எலுமிச்சையின் சாறைப் பிழிந்து கொள்ளவும். இத்துடன் தாளித்த பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி பரிமாறலாம். எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம்.