பிரட் சாண்ட்விட்ச் பஜ்ஜி-இன் புகைப்படம், வெட்டி, தக்காளி சாஸுடன் பரிமாறப்பட்டுள்ளது

பிரட் சாண்ட்விட்ச் பஜ்ஜி

சைவம்

புதினா, தக்காளி சட்னிகளுடன் அடுக்கிய ரொட்டி துண்டுகளை பஜ்ஜி மாவில் முழுவதுமாக தோய்த்து மொறுமொறுப்பான சாண்ட்விச் பஜ்ஜியாக பொரிக்கப்படும் சிற்றுண்டி.

தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
20 நிமிடங்கள்
மொத்த நேரம்
55 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
கடினம்
வகைகள்பஜ்ஜிசாண்ட்விட்ச் வகைகள்

பொருட்கள்

  • 1 ரொட்டி (முழு ரொட்டி)
  • பஜ்ஜி மாவு (ஓனியன் பஜ்ஜி (செய்முறை 69) செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரிக்கவும்)
  • 1/4 கப் தக்காளி சட்னி
  • 1/4 கப் புதினா சட்னி
  • 100 கிராம் வெண்ணெய்
  • எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
  • 1 கப் புதினா தழை (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லித் தழை (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • 4 பச்சை மிளகாய் (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • இஞ்சி (சிறு துண்டு, புதினா சட்னிக்கு, அரைக்க)
  • 1/2 டீஸ்பூன் சீரகம் (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • நெல்லிக்காய் அளவு புளி (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • தேவைக்கேற்ப உப்பு (புதினா சட்னிக்கு)
  • 1/2 வெங்காயம் (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் (புதினா சட்னிக்கு, அரைக்க)
  • 2 லவங்கம் (தக்காளி சட்னிக்கு)
  • 1 துண்டு பட்டை (தக்காளி சட்னிக்கு)
  • 5 பல்லு பூண்டு (தக்காளி சட்னிக்கு)
  • 1/2 கப் நறுக்கிய வெங்காயம் (தக்காளி சட்னிக்கு)
  • 1 கப் நறுக்கிய தக்காளி (தக்காளி சட்னிக்கு)
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் (தக்காளி சட்னிக்கு)
  • தேவைக்கேற்ப உப்பு (தக்காளி சட்னிக்கு)
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் (தக்காளி சட்னிக்கு)

செய்முறை

  1. பிரட்டின் ஓரங்களை சுத்தரித்துவிட்டு ஒரே அளவு சதுரங்களாக வெட்டவும் (நான்கு துண்டுகளாக்கவும்).
  2. வெண்ணெயை ரொட்டியின் ஒரு பக்கம் மட்டும் தடவவும்.
  3. ஒரு பிரட் துண்டின் மேல் வெண்ணெய் தடவியபின் புதினா சட்னி தடவவும்.
  4. அதன்மேல் இன்னொரு ரொட்டி துண்டு வைக்கவும். அதன்மேல் தக்காளி சட்னி தடவவும்.
  5. அதற்கும் மேலே ஒரு ரொட்டித் துண்டை வெண்ணெய் தடவிய பக்கம் சட்னியின் மேல் படும்படி மூடவும் (3 ஸ்லைஸ் சேர்ந்து ஒரு அடுக்கில் இருக்கவேண்டும்).
  6. இதேபோல எல்லா அடுக்குகளையும் தயாரிக்கவும்.
  7. கைகளால் நன்றாக அமுக்கிவிட்டு பஜ்ஜிமாவில் நன்றாக முங்கும்படி தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
  8. புதினா சட்னி செய்முறை: புதினா சட்னிக்கு குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிதளவே தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  9. தக்காளி சட்னி செய்முறை: பூண்டு மற்றும் பட்டை, லவங்கம் கடைசியில் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.
  10. வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து ஈரம் வற்றும்வரை வதக்கவும்.
  11. உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கீழே இறக்கவும்.
  12. நன்றாக ஆறியதும் கெட்டியான சட்னியாக அரைக்கவும்.
  13. கவனிக்க: உங்கள் விருப்பப்படி எந்தவிதமான சட்னியும் உபயோகப்படுத்தி இந்தமாதிரி பஜ்ஜி செய்யலாம். ஆனால் சட்னியை கெட்டியாக அரைக்கவேண்டும். தக்காளி சாஸைக்கூட ஒரு அடுக்கின் மேலே தடவ உபயோகப்படுத்தலாம்.
  14. குறிப்பு: மிக்ஸியில் அரைக்கும்போது சட்னி தளர்த்தியாகிவிட்டால் சிறிது நேரம் மெல்லிய துணியில் அல்லது பிளாஸ்டிக் வடிகட்டும் கரண்டியில் போட்டு அதிக தண்ணீர் வடிந்ததும் உபயோகப் படுத்தலாம்.