
உருளைகிழங்கு ஸ்டப் பஜ்ஜி
சைவம்சிறு உருளைக்கிழங்குகளை பிளந்து பூண்டு-சீரக விழுது நிரப்பி மசாலா கடலைமாவு மாவில் தோய்த்து பொரிக்கப்படும் பஜ்ஜி.
- தயாரிப்பு நேரம்
- 25 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 40 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்பஜ்ஜி
பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- 1 சிட்டிகை மஞ்சள் பொடி
- 1 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி
- 1 டீஸ்பூன் தனியா பொடி
- தேவைக்கேற்ப உப்பு
- 2 சிட்டிகை சமையல் சோடா
- எண்ணெய் (பொரிக்கத் தேவையான அளவு)
- 1/4 கிலோ சிறு உருளைக்கிழங்கு
- 4 பல்லு பூண்டு (அரைக்க)
- 3 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி (அரைக்க)
- 1 டீஸ்பூன் சீரகம் (அரைக்க)
- 1 1/2 டீஸ்பூன் உப்பு (அரைக்க)
செய்முறை
- உருளைக்கிழங்கை கமாராண அளவுள்ள ஒரே மாதிரி சைசில் வாங்கவும்.
- குக்கரில் வேக வைத்து தோலுரிக்கவும்.
- கூரான கத்தியால் மேலிருந்து முக்கால் பாகம்வரை இறங்கும்படி அறுக்கவும்.
- அரைத்த விழுதில் சிறிதளவு அதன் மத்தியில் பூசவும்.
- கடலை மாவோடு மஞ்சள் தூள், தனியாப் பொடி, உப்பு, மிளகாய்த் தூள், சமையல் சோடா சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்து பஜ்ஜி மாவு தயாரிக்கவும்.
- தயாரித்த உருளைக்கிழங்கை இந்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
- கவனிக்க: சிறு உருளைக்கிழங்கை வாங்கி உபயோகப்படுத்தினால் இந்த பஜ்ஜி நன்றாக இருக்கும்.