
குழாய்ப்புட்டு
சைவம்இடியாப்ப மாவை தேங்காய்ப்பூ, சீனியுடன் அடுக்காக புட்டுக் குழலில் நிரப்பி ஆவியில் வேகவைக்கப்படும் இனிப்பு புட்டு.
- தயாரிப்பு நேரம்
- 15 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 30 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்புட்டுஇனிப்பு
பொருட்கள்
- இடியாப்ப மாவு (உப்புத்தண்ணீர் தெளித்து தயார் செய்தது)
- 1 தேங்காய் (துருவியது)
- தேவைக்கேற்ப சீனி
செய்முறை
- இடியாப்ப மாவில் சிறிது உப்புத்தண்ணீர் தெளித்து மேலே கூறியபடி புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.
- புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு, அடுத்து ஒரு கை மாவு போட்டு, அடுத்து சீனி கொஞ்சம் தூவவும். அடுத்து தேங்காய்ப்பூ தூவவும்.
- பழையபடி மாவு, சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலயத்தில் தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேக வைக்க வேண்டும்.
- மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து குச்சியால் புட்டை வெளியே தள்ளவும்.