கருப்பட்டி இட்லி
கருப்பட்டி இட்லி
வகைகள்இட்லி
பொருட்கள்
- 250 மி.லி. அரிசி
- ½ கிலோ கருப்பட்டி (250 மி.லி. அரிசிக்கு)
செய்முறை
- மேற்படி இட்லிக்கு மாவு தயார் செய்வது போலவே உப்பு மட்டும் போடாமல் மாவைக் கட்டியாக தயார் செய்து வைக்கவும். காலையில் மாவில் ¼ ஸ்பூன் சோடா உப்பு, தேங்காய்ப்பூ விருப்பமான அளவு, கருப்பட்டி பால் கெட்டியாகக் காய்ச்சி இலேசான சூடாகவோ அல்லது ஆறவிட்டோ வடிகட்டி மாவில் விட்டுக் கிளறவும். இட்லித் தட்டில் வேக வைக்கவும். விருப்பப்படி இனிப்பை குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். கருப்பட்டியைக் குறைத்துக் கொஞ்சம் சீனியையும் கலந்து கொள்ளலாம். இந்த மாவை இளஞ்சூட்டில் தோசையாக எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுடலாம்.