காரச் சேவு

வகைகள்சிற்றுண்டி

பொருட்கள்

  • 2 கிலோ கடலை மாவு
  • 200 கிராம் டால்டா
  • 500 கிராம் நல்லெண்ணெய்
  • சிறிதளவு மிளகு பொடி
  • சிறிதளவு உப்பு
  • 100 கிராம் அரிசிமாவு
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • 10 கிராம் மிளகாய் தூள்
  • சிறிதளவு பெருங்காயம்
  • சிறிதளவு வெள்ளபூடு பொடி

செய்முறை

  1. கடலை மாவு அரிசிமாவுடன், மிளகாய்தூள், பெருங்காயம், பூடு மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு தண்ணீர் சேர்த்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் காரச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிதளவு மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும். மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். (முறுக்கு குழலில் பிழிந்து தயார் செய்ததும் உதிரியாக்கி கொள்ளலாம்.)