ஜவ்வரிசி பாயசம்
ஜவ்வரிசி பாயசம்
வகைகள்இனிப்பு
பொருட்கள்
- 200 கிராம் ஜவ்வரிசி
- 250 கிராம் வெல்லம்
- 2 முடி தேங்காய் (துருவி பால் எடுக்கவும்)
- 50 கிராம் முந்திரிபருப்பு
- 5 கிராம் ஏலக்காய்
செய்முறை
- அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போடவும். சூடாக பரிமாறவும்.