இட்லியின் புகைப்படம், ஸ்டீல் தட்டில் பரிமாறப்பட்டுள்ளது

இட்லி

சைவம்

மென்மையான, பஞ்சு போன்ற அரிசி-பருப்பு மாவால் ஆவியில் வேகவைக்கப்படும் இட்லி, தென்னிந்தியாவின் அன்றாட காலை உணவு.

தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்
15 நிமிடங்கள்
மொத்த நேரம்
45 நிமிடங்கள்
பேருக்கு
4
கடினத்தன்மை
எளிது
வகைகள்இட்லி வகைகள்

பொருட்கள்

  • 300 மி.லி. புழுங்கல் அரிசி
  • 75 மி.லி. உளுந்தம் பருப்பு

செய்முறை

  1. அரிசி போடும் அளவிற்கு நாலில் ஒரு பாகம் உளுந்தம்பருப்பு போட வேண்டும். அரிசியை நன்றாகத் தண்ணீர் விட்டு நனைய வைத்து உரலில் இட்டு நன்றாக ஆட்டவும். உளுந்தபருப்பையும் நன்றாக நனைய வைத்து, அதையும் உரலில் இட்டு, தண்ணீர் தெளித்து வெண்ணெய் போல் ஆட்டவும். இரண்டு மாவுகளையும் உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து சுமார் 3 மணி நேரம் புளிக்க வைத்து, இட்லி தட்டிலிட்டு வேக வைக்கவும். இட்லி மாவையே தோசைக்கும் உபயோகப்படுத்தலாம். தோசைக்கு அரிசியின் அளவில் மூன்றில் ஒரு பாகம் உளுந்தம் பருப்பு போட்டால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும். இட்லிக்கு உளுந்தம் பருப்பு புதிய பருப்பு என்றால் சற்று குறைத்துப் போட்டால் நல்லது.