
இடியாப்பம்
சைவம்வறுத்து இடித்த அரிசி மாவை பிசைந்து இடியாப்பக் குழலில் பிழிந்து இழைகளாக்கி இட்லிப்பானையில் ஆவியில் வேகவைக்கப்படும் தமிழக டிபன்.
- தயாரிப்பு நேரம்
- 30 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 15 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 45 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- கடினம்
வகைகள்ஆவியில் வேகவைத்த டிபன்
பொருட்கள்
- பச்சரிசி (இடித்து மாவு தயார் செய்யவும்)
- தேவைக்கேற்ப உப்பு
- தண்ணீர் (கொதிக்க வைத்தது)
செய்முறை
- இடித்த மாவை வறுத்தும் இடியாப்பம் செய்யலாம். மாவை, மாவு இலேசாகி பறக்கும் வரையில் வறுத்துச் சலித்துக் கொள்ளவும்.
- மாவை இட்லிச்சட்டியில் ஒரு துணியில் வைத்து விரலினால் உருட்டினால் உருளும் வரை அவித்து, (உடனே கட்டியை எடுத்துவிட்டு) ரவை சல்லடையினால் சலித்து, கட்டியை மீண்டும் இடித்து சலித்து கடைசியில் பொடிக்கண் சல்லடையில் சலித்து விரிந்த தட்டில் உலர வைக்கவும்.
- இவ்விரண்டு முறையிலும் மாவு தயார் செய்து பல நாட்கள் கெடாமல் டின்களில் வைக்கலாம்.
- தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் ஊற்றி உப்புப்போட்டு பிசைந்து சூடாக இடியாப்பக் குழலில் பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்கவும்.