
ஹண்ட்வோ
சைவம்புளிக்க வைத்த கடலைமாவு-அரிசிமாவு மாவை கடுகு-கறிவேப்பிலை தாளித்து வாணலியில் தடிமனான பொன்னிற அடையாக சுடப்படும் சிற்றுண்டி.
- தயாரிப்பு நேரம்
- 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 30 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 50 நிமிடங்கள்
- பேருக்கு
- 6
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 1 கப் கடலை மாவு
- 1 கப் அரிசி மாவு
- 1 1/2 டீஸ்பூன் உப்பு
- 1/2 கப் நறுக்கிய கொத்தமல்லித் தழை
- 3/4 டீஸ்பூன் எள்ளு
- 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை (பொடித்தது)
- 1/2 டீஸ்பூன் தனியா
- 2 கப் புளித்த மோர்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 1/4 டீஸ்பூன் சமையல் சோடா
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் (தாளிக்க)
- 1/2 டீஸ்பூன் கடுகு (தாளிக்க)
- 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை (தாளிக்க)
- 10 பச்சை மிளகாய் (அரைக்க)
- 1 அங்குலத்துண்டு இஞ்சி (அரைக்க)
- 1 பல்லு பூண்டு (அரைக்க)
செய்முறை
- அரிசி மாவு, கடலைமாவோடு பொடித்த பொட்டுக்கடலை, எள்ளு, தனியா, உப்பு சேர்த்து மோரில் கலந்து 10 மணி நேரம் மூடி வைக்கவும்.
- சுடுவதற்கு முன் அரைத்த விழுது, சோடா, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி நன்றாகக் கலக்கவும்.
- ஒரு அகலமான வாணலியை எடுத்துக் கொண்டு 1½ டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். வாணலிக்குத் தகுந்தபடி 1/4 அங்குல கனத்திற்கு கலந்த மாவை ஊற்றி மூடியால் மூடி குறைந்த அனலில் வைக்கவும்.
- மேல் பாகம் பச்சைமாவு இல்லாமல் வெந்து இருக்கும்போது மெதுவாகத் திருப்பிப் போட்டு மேலும் எண்ணெய் விடவும். இருபுறமும் நன்கு சிவந்து உள்ளே உள்ள மாவு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
- சதுரத் துண்டங்களாக அரிந்து பரிமாறவும். குறிப்பு: இதையே ஓவனிலும் பேக் செய்யலாம்.