முருங்கைக் காம்பு சூப்
முருங்கைக் காம்பு சூப்
வகைகள்சூப்
பொருட்கள்
- 100 கிராம் முருங்கைக் காம்பு
- 1 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 6 மிளகு
- சிறிதளவு இலவங்கபட்டை இலை
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- தாளிக்க எண்ணெய்
- 1 பச்சை மிளகாய்
- 50 கிராம் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு
- உப்பு
செய்முறை
- முருங்கைக் காம்பை மூன்று அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, இலவங்க பட்டை இலை, மிளகு, வெங்காயம், தக்காளி, முருங்கைக் காம்பு, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, பருப்பு சேர்க்கவும். கலவை நன்றாக கொதித்தவுடன் இறக்கவும். சூப் தயார். (தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.)