
சீன காய்கறி பகோடா
சைவம்நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், குடமிளகாயை சோயா-மிளகாய் சாஸில் ஊற வைத்து மாவில் புரட்டி மொறுமொறுப்பாக பொரிக்கப்படும் சீன பாணி பகோடா.
- தயாரிப்பு நேரம்
- 40 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம்
- 20 நிமிடங்கள்
- மொத்த நேரம்
- 60 நிமிடங்கள்
- பேருக்கு
- 4
- கடினத்தன்மை
- நடுத்தரம்
வகைகள்கலப்பு உணவு
பொருட்கள்
- 3 பெரிய வெங்காயம்
- 3 கேரட்
- 200 கிராம் முட்டைக்கோஸ்
- 2 குடமிளகாய்
- 1/2 டீஸ்பூன் சீன உப்பு (Ajinomoto)
- 2 டீஸ்பூன் சோயா சாஸ்
- 2 டீஸ்பூன் மிளகாய் சாஸ்
- 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
- தேவையான அளவு உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த ரொட்டித் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் மைதா
- 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- எண்ணெய் (தேவையான அளவு)
செய்முறை
- வெங்காயத்தையும், குடமிளகாயையும் மெல்லிய வட்ட வடிவ துண்டங்களாக்கவும். கேரட், கோஸ் இரண்டையும் தீக்குச்சிகளைப் போல நறுக்கிக் கொள்ளவும்.
- அரிந்த காய்கறிகள் எல்லாவற்றையும் ஐஸ் போட்ட தண்ணீரில் 1/2 மணி நேரம் போட்டு வைக்கவும் (காய்கறிகள் இதனால் சிறிது கெட்டிப்படும்). தண்ணீரிலிருந்து காய்கறிகளைப் பிழிந்து எடுத்து ஒரு துணியின் மேல் பரப்பி தண்ணீரைத் துடைத்து எடுக்கவும்.
- துடைத்தபின் ஒரு தட்டின் மேல் பரப்பி அதோடு உப்பு, மிளகாய்த் தூள், சீன உப்பு, சாஸ் வகைகள் சேர்த்து கலந்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
- ஊறியபின் மாவு வகைகளையும், காய்ந்த ரொட்டித் தூளையும் தூவி கலந்து சூடான எண்ணெயில் பிடிக்கும்வரை கைகளால் பிசறி விடவும் (பகோடா போடுவது போல). மொறு மொறுவென்று பொரிந்ததும் சல்லடைக் கரண்டியால் எடுத்து எண்ணெயை நன்கு வடிய விட்டு சூடாகப் பரிமாறவும்.