கோழிக் குழம்பு

வகைகள்குழம்பு

பொருட்கள்

  • 1/2 கிலோ கோழி
  • 1/2 கரண்டி மிளகுத்தூள்
  • 2 கரண்டி சீரகத்தூள்
  • 1/2 மூடி தேங்காய் (பால்)
  • 50 கிராம் வெங்காயம்
  • 50 கிராம் மிளகாய்தூள்
  • 2 கரண்டி மல்லித்தூள்
  • சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள்
  • 100 கிராம் நல்லெண்ணெய்

செய்முறை

  1. கோழியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி கோழிக்கறி போட்டு வதக்கி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சிறிது நேரம் மூடி வைக்கவும். கோழிக்கறியை சிறிது நீரில் வேகவிடவும். பின் மசாலாவையும், தேங்காய்பாலையும் கறியில் ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும். கறி வெந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கி விடவும்.