கோழிக்குருமா
கோழிக்குருமா
வகைகள்கறி
பொருட்கள்
- 1 கிலோ கோழிக்கறி
- 2 மேஜைக்கரண்டி கசகசா
- 2 அங்குலம் பட்டை
- 8 ஏலக்காய்
- 2 தேக்கரண்டி மல்லி (தனியா)
- 2 முந்திரிப்பருப்பு
- 10 கிராம்பு
- 2 அங்குலம் இஞ்சி
- 1 தேங்காய்
- 30 சிறிய வெங்காயம்
- 2 பல் பூண்டு
- 15 பச்சை மிளகாய்
செய்முறை
- 1 கிலோ கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி கசகசா, 12 முந்திரிப்பருப்பு, 2 அங்குலம் இஞ்சி, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். 1 பெரிய தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ளவும். 30 சிறிய வெங்காயங்களை நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 10 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 அங்குலம் பட்டை, 3 கிராம்பு, 3 ஏலக்காய், நறுக்கிய வெங்காயம், 2 பல் பூண்டு, 15 பச்சை மிளகாய்கள் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் துண்டுகள் செய்த கோழிக்கறியையும் போட்டு நன்றாக வதக்கவும். பின் தேங்காய் பாலை ஊற்றி, தேவையான உப்பு போட்டு, அரைத்த மசாலாவையும் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் மிதமான தீயில் வைத்து வெந்து, குருமா கெட்டியான பின் இறக்கவும்.